வெளிநாட்டவரை திருப்பி அனுப்பும் ட்ரம்பின் நடவடிக்கை தொடங்கியது- வீடியோ

  • 6 years ago
அமெரிக்காவில் முறைகேடாக தங்கி இருக்கும், குடியுரிமை பெற்று இருக்கும் நபர்களின் வெளியேற்றம் தொடங்கிவிட்டது. நேற்றுதான் எச்-1பி விசா முறையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமெரிக்கா அறிவித்தது. ஆனால் 24 மணி நேரத்திற்குள் டிரம்ப் தன்னுடைய வேலையை தொடங்கிவிட்டார். இந்தியர்கள் மட்டும் இல்லாமல் அங்கு குடியுரிமை பெற்று இருக்கும் அயல்நாட்டு நபர்கள் அனைவரும் இனி சோதனை செய்யப்படுவார்கள். யாருக்கெல்லாம் சரியான சான்றிதழ்கள், ஆதாரங்கள் இல்லையோ அவர்கள் எல்லாம் மறுகேள்வி கேட்காமல் நாட்டைவிட்டு நீக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

''அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்'' இதுதான் டிரம்ப்பின் தேர்தலுக்கு பிந்தைய குறிக்கோள். அவருடைய மகள் இவாங்கா டிரம்ப் வெளிநாட்டு ஆடைகளை உடுத்தினாலும் குடிமக்கள் அனைவரும் அமெரிக்க தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல் நாட்டை சுற்றி சுவர் எழுப்பவும் திட்டமிட்டு வருகிறார்.

மெக்சிகோவில் இருந்து பல மக்கள் அமெரிக்காவில் ரகசியமாக குடியேறி இருக்கிறார்கள். மேலும் இந்தியா போன்ற நாட்டில் இருந்தும் பலர் அங்கு குடியேறி உள்ளனர். இவர்களில் யாருக்கு எல்லாம் சரியான சான்றிதழ்கள் இல்லையோ அவர்களை எல்லாம் வெளியேற்ற போவதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். அதன் முதல் பணி தற்போது தொடங்கி இருக்கிறது.

Indian-origin man named Baljinder Singh, 43, loses citizenship under Trump administration. He arrived in the USA in 1991. New Jersey administration has revoked his naturalization.