'நா நுவ்வே' படத்தில் ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் தமன்னா- வீடியோ

  • 6 years ago
விக்ரமுடன் 'ஸ்கெட்ச்' படத்தை முடித்து விட்டு, குயின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வந்த தமன்னா, தற்போது ஜெயேந்திரா இயக்கத்தில் நந்தமுரி கல்யாண் ராம் நாயகனாக நடிக்கும், 'நா நுவ்வே' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். 'நா நுவ்வே' படத்தில் ரேடியோ ஜாக்கியாக காமெடி கலந்த ரோலில் நடிக்கிறார் தமன்னா. ரேடியோவில் ஒளிபரப்பாகும் காதலர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை மையமாக வைத்துத்தான் இந்தப் படமே உருவாகிறதாம். கலகலப்பான காமெடி ரோலில் நடிப்பதோடு, முதன்முறையாக பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவிலும் நடிக்கிறார் தமன்னா. அதனால் கல்யாண்ராமுடன் நடிக்கும் இந்தப் படம் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது எனக் கூறியிருக்கிறார் தமன்னா.

Tamanna is acting in a new movie opposute nandamuri kalyan ram in a new telugu movie called naa nuvve.
This movie is slated for release very soon. she is also acting in the tamil version of queen.

Recommended