தாயை படியில் தள்ளி விட்டு கொன்ற மகன்

  • 6 years ago
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாயை கவனித்துக்கொள்ள அலுப்படைந்து அவரது மகனே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் வசித்து வந்தவர் ஜெய்ஸ்ரீபென். 64 வயதான இவருக்கு 36 வயதில் சந்தீப் நத்வானி என்ற மகன் உள்ளார்.

சந்தீப் நத்வானி ராஜ்கோட்டில் உள்ள ஃபார்மஸி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றார். தாயும் மகனும் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.இந்நிலையில் ஜெய்ஸ்ரீபென் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். படுத்த படுக்கையான அவரை மகன் சந்தீப் நத்வானிதான் கவனித்து வந்தார்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி ஜெய்ஸ்ரீபென் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

A 36-year-old assistant professor killed his mother and pretended as suicide caught on camera. A 36-year-old assistant professor was caught on camera while taking his 64-year-old mother to the terrace of his residential building. He allegedly pushed her from there.