பைக் ரேசர்ஸ் அட்டகாசம் தாங்க முடியலேப்பா!- வீடியோ

  • 6 years ago
சென்னையில் சாலைகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்படும் பேரிகார்டுகளை பைக் ரேசர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபடி இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதெல்லாம் ஒரு கொண்டாட்டமா என்று அனைவர் மனதிலும் இந்த காட்சிகள் கேள்விகளை எழுப்புகின்றன. புத்தாண்டு கொண்டாட்டம், வார இறுதி பைக் ரேஸ் என்று த்ரிலுக்காக அதிவேகமாக பயணம் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் இளைஞர்கள். போலீசார் எவ்வளவோ எச்சரிக்கை விடுத்த போதும் அதனை பொருட்படுத்தாமல் போலீசாரை ஏமாற்றி ஏதோ சாதனை செய்வதாக நினைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏன் சில நேரங்களில் உயிரையே காவு வாங்கும் பைக் ரேஸ்களில் இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்.

கடந்த 31ம் தேதி நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இரு சக்கர வாகனத்தில் உள்ள சைலென்சர்களை கழட்டிவிட்டுவிட்டு வண்டியை வேகமாக ஓட்டி மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தினர் இளைஞர்கள். அதற்கே பலரின் வசவு வார்த்தைகளை வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

Chennai bike racers are endangering lives of others using the road. Pedestrians and other vehicle drivers are at risk. The video reccording going viral in social medias.