• 7 years ago
ஊரே பார்த்த ஒரு படத்தை நஸ்ரியா தற்போது தான் பார்த்துள்ளார். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், ஃபஹத் ஃபாசில், சினேகா உள்ளிட்டோர் நடித்த வேலைக்காரன் படம் ரிலீஸாகி ஹிட்டாகியுள்ளது. இந்த படம் மூலம் மலையாள நடிகரான ஃபஹத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

வேலைக்காரன் படம் 22ம் தேதி ரிலீஸானது. ஆனால் அந்த படத்தை நஸ்ரியா நஸீம் தற்போது தான் பார்த்திருக்கிறார். நஸ்ரியாவின் கணவர் ஃபஹத் தான் வேலைக்காரன் படத்தின் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைக்காரன் படத்தை மிகவும் என்ஜாய் செய்து பார்த்தேன். என் கணவருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என ட்வீட்டியுள்ளார் நஸ்ரியா.

கணவர் நடித்த படத்தையே இவ்வளவு லேட்டாக பார்த்திருக்கிறீர்களே. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று நெட்டிசன்ஸ் நஸ்ரியாவிடம் கேட்டுள்ளனர்.

தனது அலட்டிக்கொள்ளாத நடிப்பால் ஃபஹத் தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். அவர் மணிரத்னம் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் ஒரு தமிழ் படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.


Actress Nazriya Nazim tweeted that, 'Enjoyed a lot #velaikaran movie And so much happy for my love ❤️'. Velaikkaran is Fahadh Faasil's debut movie in Tamil. He has signed two more tamil movies including the one to be directed by none other than Mani Ratnam.

Category

🗞
News

Recommended