தேசிய மருத்துவ கமிஷன் அமைக்கும் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் போராட்டம் நடத்துவதால் புறநோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக 25 பேர் கொண்ட தேசிய மருத்துவ கமிஷன் அமைக்கும் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவர்கள் நவீன மருத்துவ முறையான அலோபதி டாக்டர்களாவதற்கு வாய்ப்புகள் அளிப்பது குறித்த அறிக்கையும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன. இம் மசோதாவிற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் இன்று அனைத்து அரசு மருத்துவர்கள் காலை 6 மணியில் இருந்து மாலை 6மணி மணிவரை புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை புறக்கணிக்கப்பதாக அறிவித்துள்ளனர். மருத்துவர்களின் இப்போராட்டத்தால் புற நோயாளிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். பார்லியில் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் இம்மசோதா குறித்து விவாதம் நடைபெற உள்ள நிலையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Des : Doctors across the country today protested against the lodging of the National Medical Commission Bill in Loksabha.
Category
🗞
News