முத்தலாக் சட்டத்தை வரவேற்ற முஸ்லீம் பெண்களின் அடுத்த கோரிக்கை

  • 7 years ago
பலதார திருமணத்தையும் மத்திய அரசு அரசு தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இஸ்லாமியப் பெண்களின் திருமண பாதுகாப்பு உரிமையை காக்கும் வகையில் மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த தடைச் சட்டம் நேற்று முன்தினம் லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் தடைச்சட்டத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பிரிவு சேர்க்கப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது உள்நோக்கம் கொண்டது என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இஸ்லாமியர்களின் பழங்கால முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் போரிட்டு வந்த இஸ்லாமியப் பெண்கள் மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த தடைச்சட்டம் ஒரு புதிய ஆரம்பம் என்றும் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். மேலும் இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமி கணவர்கள் தங்களின் மனைவிகளுக்கு தலாக் சொல்வதை தடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The woman welcomed the triple talaq bill passed in Lok sabha. They are urging the polygamy also should be banned. The triple talaq alone will not help woman they needs polygamy ban.