கிருஷ்ணப்பிரியாவுக்கு வளைகாப்பு நடத்திய ஜெயலலிதா- வீடியோ

  • 7 years ago
இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வளைக்காப்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா அவருக்கு வளையல் போடும் போட்டோக்களை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் ஜெயலலிதாவுக்கு சொந்தமான திராட்சை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு ஆதரவு கொடுத்த ஜெயலலிதா சசிகலாவோடு சேர்த்து ஜெயராமனின் மனைவி இளவரசி, அவரது மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்டோரை போயஸ்கார்டனில் தங்க வைத்துக்கொண்டார். இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு கிருஷ்ணப்பிரியாவுக்கு ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் வளைக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த போட்டோக்களை கிருஷ்ணப்பிரியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் ஆடம்பரமில்லாமல் எளிதான சேலையில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் ஜெயலலிதா. அவரை பார்த்து கிருஷ்ணப்பிரியா பேசுவது போன்றுள்ளது போட்டோ.கிருஷ்ணப்பிரியாவுக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை போடுகின்றனர். பின்னர் ஜெயலலிதா கிருஷ்ணப்பிரியாவுக்கு வளையல் போடுகின்றார்.

பூக்களை தூவி ஜெயலலிதா கிருஷ்ணப்பிரியாவுக்கு ஆசிர்வாதம் செய்கிறார். ஒரு பதார்த்தங்கள் நிரப்பப்பட்ட வாளியை கிருஷ்ணப்பிரியாவுக்கு கொடுக்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதா பங்கேற்ற அந்த புகைப்படங்களை சில நினைவுகள் நம் மரணம் வரை கூடவே பயணிக்கும். அவைகளுள் இதுவும் ஒன்று என கூறி பதிவிட்டுள்ளார் கிருஷ்ணப்பிரியா.

மேலும் வளைப்பூட்டும்போது ஜெயலலிதா என்ன தவம் செய்தனை யசோதா " என்ற , கிருஷ்ணனுக்கு யாசோதை பாடிய பாடலை , கிருஷ்ணப்ரியாவிற்கு என்று ஜெயலலிதா பாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

எங்களது மூன்று அன்னைகளில் ஒருவரை நாங்கள் இழந்துவிட்டோம் என்ற உண்மையை இன்னமும் எங்களின் மனம் நம்ப மறுக்கிறது என்றும் கிருஷ்ணப்பிரியா தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.




Sasikala brother's daughter Kirshnapriya shared her Valaikappu photos with Jayalalitha on facebook. Kirshnapriya valaikappu held in Poesgarden Jayalalitha's house.