அமித்ஷாவுக்கு ஆர்.எஸ்.எஸ். கதறல் கடிதம்- வீடியோ

  • 7 years ago
கர்நாடகா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் உட்கட்சி வெட்டு குத்தால் பாரதிய ஜனதா கட்சி மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளப் போகிறது என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடிதம் அனுப்பியுள்ளது. கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தற்போதைய முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியைத் தக்க வைக்கும் வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சியும் இழந்த ஆட்சியை மீண்டும் பெறுவதற்கு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல் இங்கு மாநில காங்கிரஸ், பாஜகவை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் பாஜகவுக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் உட்கட்சி மோதல்களால் பெரும் களேபரத்தில்தான் இருக்கிறது அக்கட்சி.

அண்மையில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, கர்நாடகாவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது வெற்று நாற்காலிகளைப் பார்த்து பேச வேண்டிய அளவுக்கு நிலைமை படுமோசமாகவே இருக்கிறது. இந்த நிலையில் உட்கட்சி மோதல் தொடர்ந்து நீடித்தால் வரும் சட்டசபை தேர்தலில் கேவலமான நிலைதான் வரும் என களநிலவரத்தை அமித்ஷாவுக்கு கலவரத்துடன் எழுதியிருக்கிறது கர்நாடக ஆர்.எஸ்.எஸ்.

கர்நாடகா நிலவரம் குறித்து எழுதப்பட்ட அக்கடிதத்தில், பாஜகவுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை பொதுவெளியில் ஊதிப் பெரிதாக்கி வருகிறது காங்கிரஸ். இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகா பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எதியூரப்பாவுக்கும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஈஸ்வரப்பாவுக்கும் ஏழாம் பொருத்தம். கர்நாடகாவில் பாஜகவைப் பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில்தான் முழுமையான நம்பிக்கையை வைத்திருக்கிறது.

According to the sources, the Karnataka RSS has sent a letter to the BJP National President Amit Shah on the worst position and internal politics of the Party.