இந்தியர்களை வேலைக்கு அழைக்கும் கனடா அரசு!- வீடியோ

  • 7 years ago
வெளிநாட்டு மக்கள் கனடாவில் எளிதாக வேலை பெறும் வகையில் அந்நாட்டு விசா நடைமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக நிறைய இந்தியர்கள் அங்கு எளிதாக வேலை வாங்க முடியும். எச்-1பி விசாவுக்கு எதிராக அமெரிக்கா நிறைய சட்டம் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. தற்போது கனடாவின் இந்த செய்தி அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதன் காரணமாக இப்போதே பல இந்தியர்கள் கனடா நோக்கி படையெடுக்க சென்றுள்ளனர். இதன்முலம் ஒரே வாரத்திற்குள் கனடாவில் எளிதாக வேலை வாங்கிவிட முடியும்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே வெளிநாட்டு மக்களுக்கு எதிராக பல சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. ''அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்'' என்ற வசனத்துடன் அதிபர் நிறைய திட்டங்களை அறிவித்தார். அதன்படி எச்-1பி விசாவில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. எச்-1பி விசா வைத்து இருப்பவர்கள் அமெரிக்காவில் முன்பு போல சலுகைகள் பெற முடியாது. அதேபோல் புதிதாகவும் எச்-1பி விசா பெறுவது கடினமானது.

அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பால் பலருக்கு வேலை போகும் அபாயம் ஏற்பட்டது. மேலும் அங்கு வேலைக்கு விண்ணப்பித்து இருந்த பலருக்கும் வேலை கிடைக்காமல் போனது. தற்போது சில நாட்களுக்கு முன்பு புதிய அறிவிப்பு ஒன்றும் வெளியானது. அதில் எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை பார்க்க அனுமதி கிடையாது என்று கூறப்பட்டு இருக்கிறது.

The Trump administration will put some in H1-B visa once again. This new change will not allow H1-B visa holders spouse to work in America under H-4 visa. After the various changes in H1-B visa Indians decides to go to Canada in huge numbers.