அருவி பெண்களுக்கான நிகழ்ச்சியை கிண்டல் செய்துள்ளனர் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன்- வீடியோ

  • 7 years ago
சமீபத்தில் வெளிவந்து பரவலான வரவேற்பை பெற்றிருக்கும் படம் 'அருவி'. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அதிதி பாலன் நாயகியாக நடித்திருந்த இந்தப் படத்தில் கவிதா பாரதி, லட்சுமி கோபால்சாமி, அஞ்சலி வரதன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது.
அருவி' படம் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை கடுமையாக விமர்சனமும் செய்தது. குறிப்பாக அந்த நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனை இமிடேட் செய்து மலையாள நடிகை லட்சுமி கோபால்சாமி நடித்திருந்தார்.
டி.ஆர்.பி ரேட்டிங்குக்காகவும், விளம்பரத்திற்காகவும், வேண்டுமென்றே அழ வைப்பது, பாதிக்கப்பட்டவர்களை கோபப்படுத்தி சண்டையை ஏற்படுத்துவது என இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சுயநலத்திற்காக செயல்படுவது போல காட்டப்பட்டிருந்தது.
இந்தப் படம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். படம் பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன், எனது நிகழ்ச்சியையும், என்னையும் கிண்டல் செய்தாலும் அருவி நல்ல படம் என்று கூறியுள்ளார்.


The film 'Aruvi' starring Aditi Balan has recently received wide acclaim. Directed by Arun Prabhu Purushothaman, Dream Warrior pictures has produced the film. Most of the scenes in this movie are being imitates Zee Tamil's 'Solvadhellam unmai' show. Now, Lakshmi Ramakrishnan has commented after watched the film 'aruvi'.

Recommended