இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியை சுட்டது முனி சேகர்?..அதிர்ச்சி தகவல்கள்....வீடியோ

  • 7 years ago
கொள்ளையர்களால் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட வில்லை என்றும் பெரிய பாண்டியின் உடலில் பாய்ந்த குண்டு மற்றொரு இன்ஸ்பெக்டர் முனி சேகருடைய துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு என்று ராஜஸ்தான் எஸ்பி தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தது குறித்த அதிர்ச்சி தகவல்களும் தற்போது வெளிவந்துள்ளது.

சென்னை லட்சுமி புரத்தில் நகைகடையில் கொள்ளையடித்து தப்பி சென்ற ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். அவர்கள் ராஜஸ்தான் சென்று அங்குள்ள போலீசாரின் உதவியை கோரியுள்ளனர். அவர்களும் தனிப்படை போலீசாருக்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர். கொள்ளையர்கள் பதுங்கியிருக்கும் இடம் குறித்து இருமாநில போலீசாரும் போலீஸ் இன்பார்மர் மூலம் தகவல் கிடைத்துள்ளது. அப்போது கொள்ளையர்கள் பதுங்கியுள்ள இடம் மிகவும் மோசமானது என்றும் இரவு நேரத்தில் அப்பகுதிக்கு செல்ல கூடாது என்று ராஜஸ்தான் போலீசார் தனிப்படையினரிடம் தெரிவித்துள்ளனர். பகல் நேரத்தில் சென்று கொள்ளையர்களை மடக்கி பிடித்து விடலாம் என்றும் ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் ராஜஸ்தான் போலீசாரின் அச்சுறுத்தலையும் மீறி தனிப்படை போலீசார் அதிகாலை வேலையில் கொள்ளையர்களை பிடிக்க சென்றுள்ளனர். அப்போது கொள்ளையர்கள் தனிப்படை போலீசார் வருவதை கண்டு தப்பித்து செல்ல முயன்றுள்ளனர். கொள்ளையர்கள் பதுங்கியிருந்த இடத்தை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது கொள்ளையர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க தன் கையில் இருந்த ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். கொள்ளையர்களின் தாக்குதலில் முதலில் அடிபட்டவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டிதான் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் தனிப்படை போலீசார் பதிலுக்கு அருகில் கிடந்த கற்களை கொண்டும் கம்புகளை கொண்டும் கொள்ளையர்களை தாக்கியுள்ளனர். ஆனால் கொள்ளையர்கள் தங்கள் கைகளில் இரும்பு பைப்புக்கள், ராடுகள், கத்தி என்று பயங்கர ஆயுதங்களை வைத்து போலீசாரை தாக்கியுள்ளனர். கொள்ளையர்களின் முரட்டு தனமன தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் தமிழக போலீசார் பின்வாங்கியுள்ளனர். இதனிடையில் பெரியபாண்டி கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளார். அவரை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். பெரிய பாண்டியை கொள்ளையர்கள் தாக்கியதை கண்ட இன்ஸ்பெக்டர் முனிசேகர் முதலில் தன் இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியை கொண்டு ஒரு ரவுண்ட் சுட்டுள்ளார். போலீசார் துப்பாக்கியால் சுடுவதை கண்டு அஞ்சிய கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று தப்பித்துள்ளனர். கொள்ளையர்கள் தப்பித்து ஓடுவதை கண்ட இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீண்டும் துப்பாக்கியால் கொள்ளையர்களை நோக்கி சுட்டுள்ளார். அப்போது துப்பாக்கியில் இருந்து குண்டு தவறுதலாக பெரியபாண்டி மீது பட்டு அவர் இறந்திருக்கலாம் என்று ராஜஸ்தான் போலீசார் கருதுகின்றனர். கொள்ளையர்கள் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் துப்பாக்கியை எடுத்து சுடுட்டு கொல்லப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால் பெரியபாண்டியின் உடலில் இருந்து அவர் வைத்திருந்த துப்பாக்கி துண்டகளை தான் பிரதே பரிசோதனையின் போது கைப்பற்றிருக்க வேண்டும். ஆனால் முனிசேகர் துப்பாக்கி குண்டுகள் எப்படி பெரிய பாண்டியின் உடலில் பட்டுள்ளது என்று ராஜஸ்தான் போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் நடந்த உண்மை என்ன வென்று சிந்தித்தோமானால் கொள்ளையர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்கள் போலீசாரை சராமரியாக தாக்கியுள்ளனர். கொள்ளையர்களின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் போலீசார் உடனே வெளியேறி இருக்கலாம். ஏன் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்றால் அதற்கு உயரதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும். ஆனால் தனிப்படை போலீசாருக்கு அதுமாதிரியான அனுமதிகள் வழங்கப்பட வில்லை. தற்காப்புக்காக வேண்டுமானால் துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்பது ஒருபுறம் இருந்தாலும் பெரியபாண்டியை கொள்ளையர்கள் தாக்கும் போதே தனிப்படை போலீசார் அவர்களை சுட்டு இருக்கலாம் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. அதேபோல் பெரிய பாண்டியின் உடலில் இருந்து துப்பாக்கியை எடுத்து கொள்ளையர்கள் சுடும்வரை உடன் இருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. இதனிடையில் ராஜஸ்தான் எஸ்பி பெரியபாண்டி உடலில் இருந்து எடுக்கப்பட்ட குண்டு மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கியுடையது என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். எது எப்படியே ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார் அனைவரையும் விசாரணை செய்தால் பெரியபாண்டி சுடப்பட்ட உண்மைகள் வெளிவரும் என்பது தான் உண்மை.....