விசிலடிக்கும் குக்கரு.... கலக்கும் தினகரனின் குக்கர் பாட்டு.... வீடியோ

  • 6 years ago
ஆர் கே நகரில் போட்டியிடும் தினகரன் அணிக்காக புதிதாக ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. பாட்டெல்லாம் பக்காதான், வாக்காளர்கள் சங்கு ஊதாமல் இருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆர்கே நகரில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். கடந்த முறை போல் தொப்பி சின்னம் கேட்ட அவருக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் தற்போது தாய்மார்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் பிரசாரம் களைகட்டி வரும் நிலையில் ஆர்கே நகரில் போடுவதற்காக ராப் ஸ்டைலில் அதிமுக பாடலை ரெடி செய்தது. அதேபோல் திமுகவும் தயார் செய்து அலறவிட்டது. அந்த வரிசையில் டிடிவி தினகரனுக்கும் ஒரு பாடல் தயாராகிவிட்டது.

விசிலடிக்கிது குக்கரு... விசிலடிக்குது குக்கரு.... துரோக கூட்டம் கதிகலங்க விசிலடிக்குது குக்கரு என்று அந்த பாடல் தொடங்குகிறது. செம குத்து போடும் அளவுக்கு உள்ள அந்த பாடல் தற்போது ஆர்கே நகரில் வாக்காளர்கள் மத்தியில் போட்டு காண்பிக்கப்படுகிறது. பாட்டு எல்லாம் ஓகே தான்... பட் வாக்காளர்கள் "விசிலடிப்பதற்கு" பதிலாக சங்கு ஊதிவிடுவார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

TTV Dinakaran team has composed election song for their campaign. RK Nagar is witnessing complaint of money distribution.

Recommended