ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி செய்த உதவிய பாருங்க

  • 7 years ago
இலங்கை ரசிகர் ஒருவருக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார் ரோகித் ஷர்மா. இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா தனது இரக்கமற்ற ஷாட்டுகளால் எதிரணியை ஒரு சில ஓவர்களிலேயே வதைத்துவிட கூடிய திறமைசாலி. ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் இனிமையானவர். நேற்றைய மொகாலி ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசியதை பார்த்து குழந்தை போல அழுத தனது மனைவிக்கு, அன்போடு முத்தம் கொடுத்ததாகட்டும், கேட்ச் விட்ட வீரர்களிடமும் பொறுமையாக நடந்து கொள்வதாகட்டும், ரோகித் ஷர்மா தனி முத்திரை பதித்து வருகிறார்.

இதேபோலதான் மனிதாபிமான அடிப்படையில் இலங்கை வீரருக்கு உதவியொன்றை செய்துள்ளார் ரோகித் ஷர்மா. ரோகித் ஷர்மாவின் உதவியால் பலன் பெறஅற ரசிகர் முகமது நிலம். இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் நிலையில், இவரும் 2 நண்பர்களோடு அனைத்து போட்டிகளையும் கண்டு ரசித்து வருகிறார்.
ஆனால், டெல்லியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின்போது திடீரென இவர் கொழும்பு திரும்பும் அவசரம் ஏற்பட்டுள்ளது. முகமது நிலத்தின் தந்தைக்கு, புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்ததால் அவர் உடனே திரும்ப விரும்பியுள்ளார்.

A Sri Lankan fan name Mohamed Nilam has revealed how timely financial assistance from star India batsman Rohit Sharma helped him to get to Colombo to attend to his father who was diagnosed with throat cancer.

Recommended