பழத்தோட்டத்தில் யானைகள் டென்ட்- வீடியோ

  • 7 years ago
பழத்தோட்டத்தில் விளைந்துள்ள பழங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன. அவற்றை விரட்டும் வரையில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலைகளில் கடந்த சில தினங்களாக சுற்றித்திரிந்த காட்டுயானைகள் அங்குள்ள அரசு பழத்தோட்டத்தில் பழங்களை சாப்பிடுவதற்காக முகாமிட்டுள்ளன. அவைகளை தோட்டத்தை விட்டு வெளியேற்ற வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் யானைகள் அங்கிருந்து வெளியேற மறுத்து பழங்களை சாப்பிட்டு வருகிறது. காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானைகளை விரட்ட பட்டாசுகளை அவ்வப்போது வனத்துறையினர் வெடிக்கின்றனர். பட்டாசு சத்தம் அவைகளுக்கு பழகிவிட்டதால் அப்பகுதியை விட்டு யானைகள் வெளியேற மறுத்துள்ளன. இதனால் அவைகளை வெளியேற்ற அடுத்து என்ன செய்யலாம் என்று வனத்துறையினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பழத்தோட்டத்தில் அனைத்து பழங்களையும் சாப்பிட்டு விட்டுதான் காட்டுக்குள் செல்வோம் என்று யானைகள் பிடிவாதமாக பழத்தோட்டத்தில் டென்ட் போட்டுள்ளன.

Des : Wild elephants have entered the country to eat fruit in the orchard. Forest officials have warned them not to get out of the house until they are repulsed.