கலிபோர்னியாவில் பற்றி எரியும் தீ..வீடியோ

Oneindia Tamil

by Oneindia Tamil

2 017 views
கலிபோர்னியாவில் ஏற்பட்டு இருக்கும் 6 காட்டுத் தீக்களின் காரணமாக அங்கு உள்ள மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு இன்னும் போதிய அளவில் உதவிகள் வழங்கப்படவில்லை. இந்த வருடத்தில் மே மாதத்தில் இருந்தே கலிபோர்னியா பகுதி பெரிய அளவில் காட்டுத் தீ காரணமாக பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டு இருக்கும் 6 காட்டுத் தீக்கள் அந்த மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு இருக்கிறது. தற்போது அந்த பகுதி மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர முயற்சி எடுத்தாலும் இன்னும் பலர் உதவி இன்றி தவித்து வருகின்றனர். சமூக வலைத்தளம் எங்கும் இவர்களின் உதவிக் குரல் கேட்டுக் கொண்டு இருக்கிறது.

கலிபோர்னியாவில் ஏற்பட்டு இருக்கும் தாமஸ் காட்டுத் தீ, சூசன் என்ற பெண்ணின் வீட்டை சூழ்ந்து இருக்கிறது. இந்த நிலையில் அவர் கண்ணுக்கு எதிராகவே அவர் வசித்த வீட்டின் நிலத்தை காட்டுத் தீ பொசுக்கி இருக்கிறது. சரியான நேரத்தில் வந்த கலிபோர்னியா தீயணைப்பு படை கஷ்டப்பட்டு தீயை வெற்றிகரமாக அணைத்து இருக்கிறது. அந்த பெண் கண்ணீருடன் தீ அணைப்பு படை செல்வதை பார்க்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.


One of the most destructive fires in California's history was raging in a sprawling national forest and creeping up the Pacific coast, forcing new evacuations. Due to this huge amount of fire, more than 2,50,000 people migrated from California, 75 people died.