காலா போஸ்டரை வெளியிட்ட தனுஷ்: சாலையில் கேக் வெட்டிய ரஜினி ரசிகர்கள்- வீடியோ

  • 7 years ago
ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு காலா படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இன்றாவது ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி அறிவிப்பாரா என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி தாதாவாக நடித்து வரும் காலா படத்தின் 2வது லுக் போஸ்டரை தனுஷ் நள்ளிரவு 12 மணிக்கு ட்விட்டரில் வெளியிட்டார். ரஜினியின் பிறந்தநாளையொட்டி இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பிறந்தநாளான இன்று தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்த ரசிகர்கள் கைகளில் கொடிகளுடன் போயஸ் கார்டனுக்கு இன்று காலை வந்தனர். அவர்களை ரஜினியை சந்திக்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் போயஸ் கார்டன் சாலையில் கேக் வெட்டினர்.

பிறந்தநாளான இன்று ரஜினி தனது ரசிகர்களை நிச்சயம் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசியலுக்கு எப்பொழுது வருவது என்பது பற்றி இன்றாவது தெளிவாக அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர்.

ரஜினிக்கு ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வாழ்த்துக்கள் வந்து குவிகிறது. #HBDSuperStarRajinikanth என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.



Actor Dhanush has released the second look poster of Rajinikanth starrer Kaala on his 68th birthday. Celebrities and fans wish the superstar a very happy birthday.

Recommended