டெபிட் கார்ட் உபயோகத்தை அதிகரிக்க திட்டம்- கட்டணங்கள் மாற்றியமைத்த ஆர்பிஐ- வீடியோ

  • 7 years ago
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இந்த கட்டண குறைப்பு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எம்டிஆர் கட்டணம் என்பது வங்கிகள் வர்த்தக நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணமாகும். இதை பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் வசூலிப்பதற்கு பதிலாக மொத்த வரவு செலவு அடிப்படையில் வசூலிக்க முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகளை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கையில், சமீப காலங்களில் பாய்ண்ட் ஆப் சேல்ஸ் இயந்திரங்கள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இதனால் டெபிட் கார்டுகளுக் கான மெர்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் ( MDR) கட்டணங்களை முறைப்படுத்துவது முக்கியமானது என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை 80 சதவீதம் அதிகரித்ததுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் பணமற்ற பரிவர்த்தனை மதிப்பு ரூ.1,800 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் வரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

RBI said rationalisation of the charges is being undertaken with a view to achieving the twin objectives of promoting debit card acceptance by a wider set of merchants, especially small traders, and ensuring sustainability of the business for the entities involved.

Recommended