• 7 years ago
பல்துறை வித்தகர் என்றும் பல முக்கிய அரசியல் திருப்பங்களுக்கு காரணமாக இருந்தவருமான சோ ராமசாமியின் முதலாமாண்டு நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர், நடிகர் என பலமுகங்களைக் கொண்டவர் சோ ராமசாமி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் ஆவர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரழந்தார். தனது தோழி ஜெயலலிதா உயிரிழந்த 2 நாட்களிலேயே சோ ராமசாமியும் மரணமடைந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.சென்னை மயிலாப்பூரில் 1934-ம் ஆண்டு பிறந்த ராமசாமி பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். இதைத்தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.


Cho Ramaswamy first year death anniverary is following today. Cho was a perfect political criticiser. He was a close friend of former Chief minister Jayalalitha. He deid on 7th of December last year.

Category

🗞
News

Recommended