அரசியலுக்கு வர ஆயத்தமாகும் விவேக்...குலதெய்வ கோவிலில் கிடா வெட்டி பூஜை- வீடியோ

  • 7 years ago
வருமானவரி சோதனைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட விவேக் அரசியலுக்கு வர ஆயத்தமாகிவிட்டதாகவே தெரிகிறது. முதற்கட்டமாக குலதெய்வ கோவிலில் கிடா வெட்டி பிரம்மாண்டமாக கிடா வெட்டி விருந்து கொடுத்துள்ளனர். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கடந்த ஓராண்டாகவே ஆடிப்போயுள்ளது சசிகலா குடும்பம். அடுத்தடுத்த மரணங்கள், வழக்குகள் என ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இளவரசி குடும்பமோ அரசியலுக்கு வர ஆயத்தமாகி வருகிறது. இளவரசியின் மகன் விவேக் ஜெயாடிவி, ஜாஸ் சினிமாஸ் நிறுவனங்களின் சிஇஓவாக இருக்கிறார். விவேக்கை பல சொத்துக்களுக்கு பொறுப்பாளராக நியமித்துள்ளார் சசிகலா.
விவேக் முன்னிலைப்படுத்தப்படுவது தினகரனுக்கு பிடிக்கவில்லை. விவேக் திருமணத்திற்குப் பிறகு பல பொறுப்புகள் அவரை நாடி சென்றுள்ளது. குறிப்பாக ஜெயாடிவி பொறுப்பு விவேக் வசம் சென்றது பிடிக்கவில்லை. இப்போது அவரை கேட்காமல்தான் பேட்டிகள், செய்திகள் ஒளிபரப்பாகி வருகின்றனர். துரைமுருகன் பேட்டி ஒளிபரப்பானதில் கடும் கோபத்தில் இருக்கிறார் தினகரன்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மதுக்கூர் அருகே கல்யாண ஓடை கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன், ஜெயா ஆகியோரின் மகளான கீர்த்தனாவை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். விவேக் மாமனார் பாஸ்கரனின் குல தெய்வ கோயில் மதுக்கூர் அருகே கல்யாண ஓடை கிராமத்தில் உள்ள ஆதியப்ப சுவாமி கோயில், பத்திரகாளியம்மன் கோயில் ஆகும்.

இரு தினங்களுக்கு விவேக், மனைவி கீர்த்தனா, மாமனார் பாஸ்கரன் மற்றும் நெருங்கிய உறவினர்கள் 50க்கும் மேற்பட்டவர்களுடன் கல்யாண ஓடை கிராமத்திற்கு வந்தார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். இத்தனை நாட்கள் இல்லாத விதமாக விவேக்கிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு பலரையும் பேச வைத்தது.


Vivek, who is in his late 20s, is the Managing Director of Jaya Television Network and Chief Executive Officer of Jazz Cinemas. Vivek Father in law baskaran offer prayer in Kuladeivam temple near Pattukkottai.