டோணிதான் இன்ஸ்பிரேஷன்.. கிரிக்கெட் உலகில் கலக்க போகும் இளம் வீரர்- வீடியோ

  • 6 years ago
நியூசிலாந்தில் நடக்க இருக்கும் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த அணியில் ராஞ்சியை சேர்ந்த வீரர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். பங்கஜ் யாதவ் என்ற அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அதே போல் அவர் வீட்டில் யாருக்கும் அவர் கிரிக்கெட் விளையாடுவதே பிடிக்காது என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் நேரடியாக இந்திய அண்டர் 19 அணிக்கு தேர்வாகி இருக்கிறார். இதனால் அவர் இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளார்.

இந்திய அண்டர் 19 அணியில் தற்போது சேர்ந்து இருக்கும் பங்கஜ் யாதவின் தந்தை பால்காரர் ஆவார். இவர்களது குடும்பமே மிகவும் வறுமையான குடும்பம் ஆகும். தினமும் மூன்றுவேளை சாப்பிடுவதற்கு கூட பணம் இருக்காது என்று இவர் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தினமும் கிரிக்கெட் போட்டி முடித்துவிட்டு களைப்பில் சமயங்களில் சாப்பிடாமலே தூங்குவிடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

Son of milkman Pankaj Yadav selected for India's under-19 squad. He is basically from Ranchi just like Dhoni. He says that Dhoni is his inspiration and will became Dhoni one day.

Recommended