விஷாலை பார்த்து அதிமுக அதிகமாக பதற்றப்படுவது ஏன்?- வீடியோ

  • 7 years ago
விஷால் வேட்புமனுவை ஏற்க கூடாது என்று அதிமுக தொண்டர்கள் தர்ணா நடத்தும் அளவுக்கு சென்றது ஏன்? அப்படி என்ன பயம் அவர்களுக்கு விஷால் மீது என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விரும்பிய நடிகர் விஷால், அதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், அவரது வேட்புமனு ஏற்கப்படுமா, இல்லையா என்பதில் பெரும் சிக்கல் எழுந்தது.
வேட்புமனு பரிசீலனை நடைபெற்ற நேற்று நள்ளிரவு வரை சஸ்பென்ஸ் நீடித்தது.போலி கையெழுத்துகள் இருப்பதாக கூறி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், பரிசீலனைக்கு பிறகு அது ஏற்கப்பட்டதாக செய்தி வெளியானது. இப்படி ஒரு செய்தி வெளியானதும் அதிமுகவினர் சாலையில் அமர்ந்து தர்ணா நடத்தினர். விஷால் வேட்புமனுவை ஏற்க கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் விஷாலை பொருட்படுத்தாத நிலையில், அதிமுகவினர் மத்தியில்தான் உச்சகட்ட பதற்றம் நிலவியது. விஷாலை தேர்தலுக்கு முன் மொழிந்தவர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக விஷால் ஆடியோ ஆதாரம் வெளியிடும் அளவு அங்கு ஒரே பதற்றம் மற்றும் பரபரப்பு நிலவியது.ஒரு சாதாரண நடிகராக மனுத்தாக்கல் செய்த விஷாலை, அதிமுகவினரின் இந்த பதற்றமும், பரபரப்பும் ஏதோ பெரிய அரசியல்வாதி என்பதை போல தூக்கிக் காட்டியது. இது விஷால் ஆதரவாளர்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியான நகர்வாகத்தான் பார்க்கப்பட்டிருக்கும். ஒருவழியாக விஷால் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்த பிறகே, அதிமுக வட்டாரத்தில் அமைதி நிலை ஏற்பட்டது. ஏன் விஷால் மீது இவ்வளவு பயம் அதிமுக தொண்டர்களுக்கு ஏற்பட்டது? என்ற கேள்வி இப்போது மக்கள் மனதில் எழுந்துள்ளது.

Why AIADMK got afraid of actor Vishal who try to contest in RK Nagar by election.

Category

🗞
News

Recommended