திரில்லாக செல்லும் கடைசி நாள் ஆட்டம்... டெல்லி டெஸ்டில் வெற்றி யாருக்கு?- வீடியோ

  • 7 years ago
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் கடைசி நாள் டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளுக்கு 31 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. மிகவும் அதிரடியாக ஆடிய கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். இவர் 243 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.ரோஹித் 65 ரன்கள் எடுத்தார்.

முதல் இன்னிங்சில் இந்தியா 536 ரன்கள் எடுத்தது. 7 விக்கெட்டுகள் இழந்து இந்தியா விளையாடிக் கொண்டு இருந்த போது இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி மிகவும் நிதானமாக ஆடியது. இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் 164 ரன்கள் எடுத்தார்.இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 373 ரன்கள் எடுத்து இருக்கிறது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸ் களம் இறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடியது. தவான் 67 ரன்களும், கோஹ்லி, ரோஹித் தலா 50 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்து இருந்த போது டிக்ளேர் செய்தது.

Third test match between India vs Sri Lanka held today in Delhi. India won the toss and choose to bat first. India got 536 runs for 7 wickets in their first innings. Sri Lanka got 373 their first innings. India got 246 runs for 5 wickets in their 2nd innings. Sri Lanka got 31 runs for 3 wickets in 4th day end.

Recommended