'விஜய் 62' படத்திற்கு மியூசிக் டைரக்டர், ஆர்ட் டைரக்டர் யார்?- வீடியோ

  • 7 years ago
அட்லீ இயக்கத்தில் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடிக்கிறார் விஜய். விஜய் - முருகதாஸ் கூட்டணி 'கத்தி', 'துப்பாக்கி' ஆகிய இரு படங்களின் கலக்கல் வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக இணைவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், விஜய் 62 படத்தில் பணியாற்றும் படக்குழுவினர் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறாராம்.

நடிகர்கள் ஒரு சில இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் ஆசைப்படுவர். அப்படி விஜய் ரசிகர்கள் மிகவும் ஆசைப்படுவது முருகதாஸ் - விஜய் கூட்டணி தான். இந்தக் கூட்டணி மீது ரசிகர்களுக்கு அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது.
இவர்கள் இருவரும் இணைந்து துப்பாக்கி, கத்தி என இரண்டு வெற்றி படங்களை கொடுத்துவிட்டனர். மூன்றாவது முறையாக இணையும் இவர்களது படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

Vijay - Murugadoss combo joins third time after the combination of two films 'Thuppakki' and 'Kaththi'. Sreekar Prasad works as the editor of Vijay 62 and Girish Gangadharan as cinematographer. The film is composed by A.R. Rahman. T.Santhanam is the art director in this film

Recommended