போட்ட கெட்டப் எல்லாம் வேஸ்ட்டா போச்சே!...வீடியோ

  • 7 years ago
கடந்த ஒரு மாதமாக புதிய ஸ்டைலில் அசத்தலாக வந்த ஜெ.தீபாவின் புதிய கெட்டப்களை ஆர்கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பளார் மதுசூதனன் மற்றும் தினகரனனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் ஜெ. தீபாவின் வேட்பு மனு போதிய அளவு பூர்த்தி செய்யப்படாததால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு பிரச்சாரம் வரை சென்ற ஜெ. தீபா இந்த முறை பாரம் 26ஐ அரைகுறையாக பூர்த்தி செய்ததால் வேட்பு மனு தாக்கலுடனேயே அவருடைய தேர்தல் களம் நிறுத்தப்பட்டு விட்டது. ஜெ. தீபாவின் மனு மீதான பரிசீலனை நடந்த போது அவரது கட்சி சார்பில் ஒருவர் கூட தேர்தல் அலுவலகத்தில் இல்லை என்பது தான் கூடுதல் விஷயம்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு மீடியாக்களின் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கிய கால கட்டம் முதலே தனது ஆடை, அலங்காரத்தில் கவனம் செலுத்தாமல் இருந்த தீபா. அண்மைக் காலமாக புதுப்பொலிவுடன் காட்சியளித்திருந்தார்.



Chennai RK Nagar voters this time will miss the campaign of Jayalalitha's nephew J. Deepa, as her nominations were rejected as it is not fully filled and submitted.