தமிழக மக்களே... புயல் தாக்காது... பி ஹேப்பி- வீடியோ

  • 7 years ago
சென்னை வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என்று என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
இது மொக்க காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று பதிவிட்டிருந்த பிரதீப் ஜான், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது, இதனால், தமிழகத்துக்கு பாதிப்பும் இல்லை என இன்று பதிவிட்டுள்ளார்.
அதிகமாக பரபரப்பு ஏற்படுத்தியது எல்லாம் வீணாகிவிட்டது எனவும் அவர் கூறியுள்ளார். இன்றைய வானிலை நிலவரம் பற்றி பிரதீப் ஜான் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:வங்கக்கடலில் உள்ள சூழல் புயல் உருவாவதற்கு எதிராகவே இருக்கிறது. இப்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாகக் கூட வலுப்பெறலாம். ஆனால், புயலாக மாறுமா என்பதே சந்தேகம்.வங்கக்கடலில் அதிகமாக உருவாகி இருக்கும் மேகக்கூட்டங்கள், மறு நாளே கலைந்துவிடலாம். ஆனால் எந்த மேகக்கூட்டமும் அவ்வளவு எளிதாக கலைந்துவிடாது.மீனவர்கள் கடலுக்குள் செல்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வடக்கு தமிழக கடற்கரை, ஆந்திரா கடற்பகுதிகுள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
நம்முடைய இந்திய வானிலை மையம் புயல் குறித்த கண்ணோட்டத்தை, கணிப்பை இன்று அல்லது நாளை மாற்றிக்கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதிரிகளில் தமிழகத்துக்கு இந்த காற்றழுத்த தாழ்வுபகுதியால், அதிகமான மழை இல்லை என்பது தெரிந்துவிட்டது.



Tamil Nadu Weatherman Tamil Nadu is in no way going to be affected by this Depression which was hyped more more than required.

Recommended