பாக். கிரிக்கெட் வீரர் இறந்து போனதாக தீயாக பரவிய வதந்தி.. வீடியோ வெளியிட்டு விளக்கம்!- வீடியோ

  • 7 years ago
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் இறந்து போனதாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. அவர் கார் விபத்தில் மரணம் அடைந்துவிட்டதாக கூறப்பட்டது. மேலும் அவரது மரணம் விபத்து அல்ல கொலை என்றும் கூட நிறைய செய்திகள் வெளியானது. இதற்காக நிறைய போட்டோ ஆதாரங்கள் வெளியானது. தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உமர் அக்மல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில நாட்களாக பெரிய கலவரம் நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக கிளர்ச்சி இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகிறது. முதலில் போலீஸ் இந்த போராட்டத்தை அடக்க முயற்சி செய்தது. பின் ராணுவம் கொண்டு வரப்பட்டது. இந்த கலவரத்தில் 10க்கும் அதிகமானோர் மரணம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த கலவரத்தில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் உமர் அக்மல் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியது.

Pakistan cricket player Umar Akmal has released a video message after he was declared dead on social media sites. He says '' I am safe and perfectly fine in Lahore all news coming from social media is fake'' in his twitter video.

Recommended