நயன் ரீல் கலெக்டரான நேரத்தில் நடிகையாகியுள்ள ரியல் கலெக்டர்- வீடியோ

  • 7 years ago
திருவனந்தபுரம் சப்-கலெக்டர் திவ்யா ஐயர் மலையாள படம் மூலம் நடிகையாகியுள்ளார். பென்னி ஆசம்சா இயக்கியுள்ள எலிஅம்மச்சிடே ஆத்யதே கிறிஸ்துமஸ் மலையாள படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படம் மூலம் நடிகையாகியுள்ளார் திருவனந்தபுரம் சப் கலெக்டர் திவ்யா ஐயர் ஐஏஎஸ். அவர் ஒரு டாக்டரும் கூட. சிஎம்சி வேலூரில் தான் மருத்துவம் படித்துள்ளார். திவ்யா ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,(படம் தொடர்பாக தமிழ் மீடியாவுக்கு அவர் அளித்துள்ள முதல் பேட்டி. திவ்யா சுத்தத் தமிழில் பேட்டி அளித்தார்.) நான் கோட்டயத்தில் பணியாற்றியபோது இயக்குனர் என்னை அணுகி நடிக்குமாறு கேட்டார். முதியோர் இல்லம் பற்றிய படம் இது. அது தான் என்னை ஈர்த்தது. முதியோர்கள் நம் சமூகத்தில் எப்படி கஷ்டப்படுகிறார்கள், எப்படி பிள்ளைகள் அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதை பற்றிய படம். இது கமர்ஷியல் படம் அல்ல. சமூகத்திற்கு கருத்து தெரிவிக்கும் படம். அதனால் தான் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். நான் ஐஏஎஸ் அதிகாரி என்பதால் முறையாக அரசிடம் அனுமதி வாங்கிய பிறகே படத்தில் நடித்தேன். ஐஏஎஸ் அதிகாரி படத்தில் நடிக்கக் கூடாது என்று சட்டம் இல்லை. ஆனால் அனுமதி வாங்கிவிட்டு நடிக்கலாம். நான் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளேன்.

Trivandrum sub-collector Divya Iyer has made her debut in Mollywood through Eliyammachiyude Aadyathe Christmas which is hitting the screens tomorrow. She has agreed to act as this is a movie about the sufferings of senior citizens. She has acted for free as the movie is about giving social message to the society.