தமிழகத்திலும் "பாண்டி" ஆட டெல்லி முடிவு?..வீடியோ

  • 7 years ago
தமிழகத்தை கிள்ளுக்கீரை போலவும் ஒரு யூனியன் பிரதேசம் போலவும் நினைத்துக் கொண்டு டெல்லி தமது அதிகாரிகளை அடுத்தடுத்து களமிறக்கிக் கொண்டு மாநில சுயாட்சியை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்க வேண்டிய மாநில அரசோ மவுனியாகவே இருந்து வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆட்சியாளர்களை திரைமறைவில் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது டெல்லி. டெல்லி நினைத்த அத்தனை திட்டங்களும் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டன.
தமிழக மக்களின் எதிர்ப்பு, தமிழகத்தின் எதிர்காலம் எதனைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலைப்படமால் தமிழக ஆட்சியாளர்கள் தலைவணங்கி டெல்லியின் உத்தரவுகளை ஏற்றுச் செயல்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார்.இந்நியமனத்தைத் தொடர்ந்து தமிழகம், டெல்லியின் நேரடி ஆளுகைக்குட்பட்ட ஒரு யூனியன் பிரதேசமாகிவிட்டது. ஆளுநர் திடீரெ திடீரென நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறார்... அதிகாரிகளை அழைத்து பேசுகிறார்... இது ஒரு மாநிலம்.. சுயாட்சி உரிமைகளை பற்றி பேசிய மண் என்பதை எல்லாம் மறந்து போய் மங்குணிகளாக தலையாட்டி பொம்மைகளாக டெல்லிக்கு அடிமைகளாக தமிழக அமைச்சர்கள் இருந்து வருகின்றனர்.

Tamil Nadu government announced posting IAS officer R Rajagopal as Additional Chief Secretary to Governor Banwarilal Purohit, with the post being equivalent in status and responsibilities to the cadre post of Chief Secretary.

Recommended