டோணியை வம்புக்கு இழுத்த ரெய்னா.. கூல் மேனின் கோபமான பதிலடி!- வீடியோ

Oneindia Tamil

by Oneindia Tamil

21 493 views
இந்திய முன்னாள் கேப்டன் டோணி எப்படி கூல் கேப்டன் பெயர் பெற்றார் என்று ரெய்னா சில நாட்களுக்கு முன் விளக்கம் அளித்தார். ரெய்னாவின் இந்த பேச்சு டோணி குறித்து பார்வையை வெகுவாக மாற்றி இருந்தது. அதேபோல் உண்மையாகவே டோணி கூல் கேப்டன்தானா என்பதையும் அவர் விளக்கி இருக்கிறார். ரெய்னாவின் இந்த பேட்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது ரெய்னாவிற்கு டோணி பதில் அளித்து குறிக்கிறார். எப்போதும் கோபமாக பேசாத டோணி இந்த முறை கொஞ்சம் கோபமாகவே பதில் அளித்துள்ளார்.

இந்திய அணியன் முன்னாள் கேப்டன் டோணி அனைவராலும் 'கேப்டன் கூல்' என்று அழைக்கப்பட்டார். டோணி உண்மையாகவே கேப்டன் கூல் தானா என்ற கேள்விக்கு ரெய்னா பதில் அளித்து இருந்தார். அதில் ''டோணி எப்போதும் கேமராவுக்கு முன் எதையும் காட்டிக் கொள்ள மாட்டார். அவர் கண்களில் இருந்து எதையும் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் டிவியில் இடைவேளை போடும் சமயங்களில் எங்களை நன்றாகவே திட்டுவார். அவருக்கு கோபம் எல்லாம் வரும். அதை எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிந்து இருக்கிறது '' என்று கூறினார்

Indian skipper Raina explains how Dhoni maintains his cool image in Tv. He says that, Dhoni was not really a cool captain. Dhoni replies to Raina's cool captain statement in his own way.