அசோக்குமார் தற்கொலை வழக்கை ஊத்தி மூட முயற்சி?- வீடியோ

  • 7 years ago
அசோக்குமார் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வட இந்தியாவில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் குடும்பத்தினருடன் அன்பு செழியன் சமரசம் பேசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்புச்செழியனுக்குச் சொந்தமான மேலமாசி வீதியில் கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம் உள்ளது. இங்குதான் பட விநியோகம், வட்டிக்கொடுத்த பணத்தை வசூல் செய்வது தொடர்பான வேலைகளை செய்து வந்தார்.சென்னை அலுவலகம், மதுரை வீடு ஆகியவற்றில்தான் சினிமா பிரமுகர்களைச் சந்திப்பார் அன்புச்செழியன்.

அரசியல் புள்ளிகளின் பணம் அன்புச்செழியனிடம் இருப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதால் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்படாமல் அன்புச்செழியனை அரசியல்வாதிகள் பாதுகாக்கிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது.

நடிகர் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் முதல்கட்டமாக அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஒரு பிரிவினர் மதுரைக்கும், மற்றொரு பிரிவினர் ராமநாதபுரத்துக்கும் சென்று அன்புசெழியனை தீவிரமாக தேடினர்.

Sources say that Anbu Chezhiyan is trying for compromise with Sasikumar side