வாங்கிய பங்களாவை கூட வித்திருக்கேன்..மனம் திறக்கும் பார்த்திபன்!- வீடியோ

  • 7 years ago
சினிமா பைனான்சியர்களிடம் வாங்கிய கடனுக்காக தான் முதல் முறையாக வாங்கிய பங்களாவைக் கூட விற்றுவிட்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலை தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன்சுமை, கந்து வட்டி கொடுமையால் அசோக்குமார் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கந்துவட்டி கொடுமையால் பறிபோகும் கடைசி உயிர் இதுவாக இருக்க வேண்டும் என்றும் கந்துவட்டியை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அசோக்குமாரின் மரணத்துக்கு காரணமான பைனான்சியர் அன்புச்செழியன் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சுசீந்திரன், நடிகர் அஜித், இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோரும் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாக கூறினார். இந்நிலையில் நடிகர் பார்த்திபனும் கந்துவட்டி கொடுமையால் தனக்கு நேர்ந்த அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதாவது நான் சினிமா பைனான்சியர் பல பேர்கிட்ட வட்டிக்கு பணம் வங்கியிருக்கேன் என அவர் தெரிவித்துள்ளார். அதில் அன்புச்செழியனும் ஒருவர் என்றும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

வாங்குன பணத்தை ஒத்துக்கிட்ட வட்டியோட சொன்ன தேதியில் கொடுக்க, தான் முதன்முதலா வாங்குன பங்களாவைக்கூட வித்திருக்கேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் யார்கிட்டேயும் தலைகுனிந்து நின்றதில்லை என்றும் பார்த்திபன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Actor Parthipan also shared his usury interest experience on twittter. He also got money for interest from Anbuchezhiyan.

Recommended