ஜெயலலிதாவின் கைரேகை பெறும் போது அவருக்கு சுய நினைவே இல்லை...டாக்டர் சரவணன்..வீடியோ

  • 7 years ago
ஜெயலலிதாவின் கைரேகையில் உயிரோட்டம் இல்லை என்று திமுக மருத்துவர் அணி மாநில துணை தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நல குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது நீண்ட காலம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் திருப்பரங்குன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து அந்த தேர்தலில் ஏ.கே.போஸை வேட்பாளராக நிறுத்துவதற்கான வேட்புமனுவில் ஜெயலலிதாவிடம் இருந்து கைரேகை பெறப்பட்டது. இதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இந்நிலையில் ஜெயலலிதா 75 நாள்களுக்கு பிறகு மரணமடைந்துவிட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதற்காக எழிலகத்தில் அவருக்கென அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளார். ஜெ.கைரேகை தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமியிடம் திமுக மருத்துவரணி மாநில துணைத் தலைவர் சரவணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து அந்த தேர்தலில் ஏ.கே.போஸை வேட்பாளராக நிறுத்துவதற்கான வேட்புமனுவில் ஜெயலலிதாவிடம் இருந்து கைரேகை பெறப்பட்டது. இதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இந்நிலையில் ஜெயலலிதா 75 நாள்களுக்கு பிறகு மரணமடைந்துவிட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதற்காக எழிலகத்தில் அவருக்கென அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளார். ஜெ.கைரேகை தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமியிடம் திமுக மருத்துவரணி மாநில துணைத் தலைவர் சரவணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

DMK Doctor Saravanan says that Jayalalitha's finger print has no alive. At the time of finger print has taken from her, she was unconsious.

Recommended