அந்தக்கால நடிகர் நடிகைகளின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - 80'ஸ் கெட் டுகெதர்!- வீடியோ

  • 7 years ago
80-களில் கொடிகட்டிப் பறந்த தென்னிந்தியத் திரையுலகப் பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர்.
இந்த ஆண்டு மகாபலிபுரத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள இன்டர்கான்டினென்ட்டல் ரெசார்ட்டில் நடைபெற்ற இந்த கெட்-டுகெதர் நிகழ்வுக்கு அனைவரும் ஊதா நிற உடையனிந்து கடந்த 17-ம் தேதி காலை அனைவரும் சங்கமமானார்கள்.
கெட்-டுகெதர் நடைபெற்ற அந்த இடம் முழுவதும் ஊதா நிறப் பூக்கள் உள்ளிட்ட கலைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இவர்களது கொண்டாட்டங்கள் இரண்டு நாட்கள் நடைபெற்றது. ரெசார்ட்டில் இருக்கும் கூடத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும், நடிகை சுஹாசினி மற்றும் நடிகை லிசி ஆகியோர் நடிகர் ராஜ்குமார் சேதுபதி, நடிகை பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குஷ்பு துணையுடன் உபசரித்தனர். மும்பை, கேரளா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரபலங்களும் ஒவ்வொருவராக வந்த வண்ணம் இருந்தனர்.

80's leading actors of South Indian cinema celebrating get together each year on a particular day. In the same way, the 8th year of this meet has been celebrated in Mahabalipuram.

Recommended