சிங்கிளாக வந்து விசாரணை ஆணையத்திடம் மாதவன் புகார்!- வீடியோ

  • 7 years ago
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜெ. தீபாவின் கணவர் மாதவன் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனிடம் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷன் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பிரமாணப் பத்திரங்கள் அளிக்கலாம் என்று நீதிபதி ஆறுமுகசாமி கூறியுள்ளார்.நீதிபதி ஆறுமுகசாமி இன்னும் களத்தில் இறங்கி விசாரணையைத் தொடங்காத நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து இந்த விசாரணை ஆணையத்திற்கு 70 கடிதங்கள் வந்துள்ளன. இந்நிலையில் ஜெ. தீபாவின் கணவர் மாதவன் சென்னை எழிலகத்தில் உள்ள நீதிபதி ஆறுமுக சாமி விசாரணை கமிஷனிடம் 18 கேள்விகள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். இந்தப் பிரமாணப் பத்திரத்தை அவர் தனியாக வந்து தான் தாக்கல் செய்துள்ளார். அவருடன் ஜெ. தீபா வரவில்லை, இருவரும் அண்மையில் ஒன்று சேர்ந்த நிலையில் போயஸ் கார்டனில் நள்ளிரவு நடந்த சோதனையின் போது ஜெ. தீபாவுடன் மாதவன் வரவில்லை என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜெ. தீபாவின் கணவர் மாதவன் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனிடம் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

Jayalalitha neice J.Deepa's husband Madhavan filed affidavits at Justice Arumugasamy comittee regarding 18 mysterious questions in the Jayalalitha's death.

Recommended