• 7 years ago
ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃபின் பிரபல தூதராக (Celebrity Ambassador) நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகளின் கல்வி உரிமைக்காக அவர் இனி குரல் கொடுப்பார்.
நடிகை த்ரிஷா நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார். விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறார்.அண்மையில் கேரள அரசும் யுனிசெஃப் நிறுவனமும் இணைந்து தயாரித்த, குழந்தைகளுக்கு தட்டம்மை ஊசி போட வலியுறுத்தும் விளம்பரத்தில் த்ரிஷா தோன்றி நடித்தார்.

இதனைத் தொடர்ந்து த்ரிஷாவின் சமூக ஈடுபாட்டுக்கு அங்கீகாரம் தரும் வகையில் 'யுனிசெஃபின் பிரபல தூதர்' என்ற பதவியை அவருக்கு வழங்கியுள்ளனர். இந்த பதவியில் இருந்தபடி அவர் குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமண முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றை எதிர்த்துக் குரல் கொடுப்பார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற த்ரிஷா பேசுகையில், "இது எனக்குப் பெரிய கவுரவம். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்புக்காக தொடர்ந்து நான் குரல் கொடுப்பேன். பெண் குழந்தைகள் 18 வயது வரை கட்டாயம் கல்வி பயின்றால் குழந்தை திருமண முறையை ஒழித்துவிடலாம்," என்றார்.

Category

People

Recommended