கொல்கத்தா டெஸ்ட் முதல் இன்னிங்சில் 172 ரன்களில் இந்தியா ஆல்அவுட்- வீடியோ

  • 7 years ago
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 172 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-இலங்கை நடுவே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது . டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.
மழையால் ஆட்டம் அடிக்கடி தடைபட்ட நிலையில், முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தை நேற்று இந்தியா தொடர்ந்தது. இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், இரண்டாவது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது.

முதல் நாளில் 12 ஓவர்களும், இரண்டாவது நாளில் 21 ஓவர்களும் மட்டுமே பந்து வீசப்பட்டன. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 172 ரன்களில் ஆல்அவுட்டானது.

1st innings - India all out for 172, Shami's belligerence ends at last. Lakmal pick of the bowlers with 4/26

Recommended