இப்படி பேசாதீங்க வானதி.. டென்ஷனான ஜெயக்குமார்!- வீடியோ

  • 7 years ago
தமிழக அரசின் எந்த ஒப்பந்தத்திலும் ஊழல் நடக்கவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பாஜகவின் வானதி சீனிவாசன் பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை சேத்துபட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : தமிழக அரசு முதல்வர் பழனிசாமியின் வழிகாட்டுதல்படி சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது. மக்கள் பிரச்னைகள் குறித்து அதிகாரிகள், அமைச்சர்களுக்கு அவ்வவோது முதல்வர் ஆலோசனை அளிப்பதால் அரசுத் துறை வேசமாக செயல்படுகிறது. ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய கடலோரக் காவல்படை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் விவகாரத்தை பொருத்தமட்டில் எப்போதுமே தமிழக அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

Tamilnadu minister Jayakumar angered over BJP's Vanathi Srinivasan comment that government is corrupted and jayakumar replied for that its not true they were alleging charges as because they were opposition.