நீங்க அயிரை மீன் குழம்பு பிரியரா?- வீடியோ

  • 7 years ago
மதுரை,திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் அயிரை மீன் குழம்பு ரொம்பவே பிரசித்தம்.. சென்னையில் கிளைபரப்பிய மதுரை ஹோட்டல்கள் கூட பஸ்ஸில் அயிரை மீன்களை வரவழைத்து பரிமாறிய காலம் உண்டு.
அதுவும் ஒருகாலத்தில் சென்னை திருவல்லிக்கேணி சாரதா மெஸ்ஸில் (இப்போது தியாகராய நகருக்கு போய்விட்டது) அயிரை மீன்குழம்பை சாப்பிடாத கரைவேட்டிக்காரர்களே இருந்தது இல்லை.
ஒரு சின்ன கப்தான்.. அதில் 50,60 குட்டி குட்டி அயிரை மீன்கள் குழம்போடு கிடக்கும்.. அப்படியே சுடுசாப்பாட்டில் பிசைந்து கட்டினா..அப்படி ஒரு ருசி.... ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அயிரை மீன் குழம்பும் கூட அரிதான ஒன்றாகிப் போய்விட்டது. இதற்கு காரணமே மழைதான். நன்றாக மழைபெய்து ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது கிடைக்கும் இந்த அயிரை மீன்கள். கடல் மீன்களை சுவைத்தோருக்கு சொல்வது என்றால் நெத்திலி மீனில் கால்வாசிதான் இருக்கும் இந்த அயிரை. இப்படியும் வைத்து கொள்ளலாம் அயிரையின் கடல் மீன் வடிவம்தான் நெத்திலி என... சரி இப்ப என்ன பிரச்சனை என்கிறீர்களா?

Now the famous Ayira Fish became as rare in Madurai and Dindigul districts due to the Drought.