கோபத்தை மறந்து அடுத்த படத்தில் விஜய்க்கு ஜோடியாவாரா நயன்தாராவா?- வீடியோ

  • 7 years ago
மெர்சல் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் 62 வது படத்தை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்குவது தெரிந்த சமாச்சாரம். படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்துவிட்டன. அடுத்து நடிக்கும் நடிகர்கள் தேர்வில் மும்முரமாக உள்ளார் முருகதாஸ். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. நயன்தாராவுக்கும் முருகதாஸுக்கும் இடையே ஒரு பனிப்போர் உள்ளதாக ரொம்ப நாளாக கூறி வருகிறார்கள். காரணம் கஜினி படத்தில் தன்னை வெறும் ஐட்டம் டான்சராகக் காட்டி டம்மியாக்கிவிட்டார் என்பதுதானாம். மலையாள பட உலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பகத் பாசில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் பகத்துக்கு தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றனவாம்.

Malayalam top hero Fahad Fasil is wants to act as a hero in Tamil and looking good scripts. Sources say that Nayanthara may be paired to Vijay in his next