தமிழகம், மகாராஷ்டிராவைவிட குஜராத் வளர்ச்சி மோசம்..வீடியோ

  • 7 years ago
குஜராத் மாநில பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 14ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சிதம்பரம் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. குஜராத் தொழில் மற்றும் வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த தொழிலதிபர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் கலந்துரையாடினார்.சிதம்பரம் கூறியதாவது:

மும்பை-அகமதாபாத் நகரங்களுக்கு நடுவேயான புல்லட் ரயில் திட்டம் குறித்து அதிருப்தி வெளிப்படுத்திய சிதம்பரம், இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்துவதை பார்த்து, முழு மெஜாரிட்டி கொண்ட ஒரு அரசில் நான் நிதி அமைச்சராக பணியாற்றவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது என்று கிண்டல் தொனியில் தெரிவித்தார்.

லோக்சபாவில் பாஜகவுக்கு இருக்கும் அறுதி பெரும்பான்மையை வைத்து, என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எங்களுக்கும் அப்படி ஒரு மெஜாரிட்டி எங்கள் அரசுக்கு இருந்திருந்தால், நிதி துறையை மொத்தமாக சீர்படுத்தியிருப்போம். சிறப்பான ஒரு ஜிஎஸ்டியை செயல்படுத்தியிருப்போம்.

Senior Congress leader P Chidambaram said his only regret in life was not having served as finance minister in a government which had an "absolute majority", as he targeted the Modi government over its economic policies

Category

🗞
News

Recommended