சிறையிலிருந்து விவேக், தினகரனுக்கு "ஆன்ஸர் ஷீட்" அனுப்பிய சசிகலா!- வீடியோ

  • 7 years ago
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா ஐடி ரெய்டு குறித்து தமது வழக்கறிஞர்கள் மூலம் விவேகிற்கும், தினகரனுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் கடந்த வியாழக்கிழமை 187 இடங்களில் சோதனையை நடத்தினர். 5 நாள்களுக்கு பின்னர் கடந்த திங்கள்கிழமை சோதனைகள் நிறைவு பெற்றன. சுமார் 5 நாள்கள் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் தங்க, வைர நகைகள், ரொக்க பணம் என பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவலை சிறையில் உள்ள சசிகலா அறிந்து கொண்டு மிகவும் மனம் வருந்தினார்.இந்த ரெய்டால் மிகுந்த மனஉளைச்சல் அடைந்த சசிகலா கடந்த 5 நாள்களாக சிறிதும் கண்கொட்டாமல் தமிழ் டிவி சேனல்களை பார்த்துள்ளார். பிறகு விடிந்தும் விடியாததுமாக நூலகத்துக்கு சென்று தமிழ் நாளேடுகளை வரி விடாமல் படித்துள்ளார்.

ரெய்டால் வெலவெலத்துக போன சசிகலா தூக்கத்தை இழந்து அண்ணி இளவரசியிடம் புலம்பியுள்ளார். பின்னர் சிறைத் துறை மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வழக்கறிஞர் அசோகனை வரவழைத்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். சட்ட ரீதியிலான ஆலோசனைகளை சசிகலா பெற்றதாக கூறப்படுகிறது.


Sasikala has sent a letter to Vivek and Dinakaran through her lawyer about what are the documents to be submitted, what are the replies to the investigating officer's query etc.

Recommended