டெல்லியில் மூன்றாம் வகுப்பு மாணவன் கொடூர கொலை..வீடியோ

  • 7 years ago
டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். சில நாட்களுக்கு முன் கழுத்தறுக்கப்பட்டு மரணம் அடைந்த அந்த சிறுவனின் பெயர் பிரத்தியுமான் தாக்குர். தனியார் பள்ளியில் நடந்த இந்த கொலையில் முதலில் அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் கைது செய்யப்பட்டார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். ஆனால் தற்போது அந்த கொலையில் அதே பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாணவனும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறான்.

டெல்லியின் குர்கான் பகுதியில் இருக்கும் ரேயான் இண்டர்நேஷனல் பள்ளியில் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த சம்பவம் நடந்தது. அந்த பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய சென்ற பணியாளர் அங்கு பிரத்தியுமான் தாக்குர் என்ற மாணவன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து இருக்கிறார். போலீஸ் வந்து அவரது உடலை சோதனை செய்கையில் அந்த சிறுவன் அங்கேயே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

Seven-year-old Pradyuman Thakur was found dead in the toilet of Ryan International School. His throat had been slit using blade. Now Class 11 student is being suspected in the murder of Pradyuman Thakur.

Recommended