அடேங்கப்பா டெடிகேஷன்.. விமர்சனம் செய்தவர்கள் வாயை அடைத்த தோனி- வீடியோ

  • 7 years ago
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டோணி மெதுவாக ஆடியதாக ரசிகர்கள் விமர்சனங்களை முன் வைத்தாலும், அவரது ஒரு போட்டோ மட்டும் வைரலாக சுற்றி வருகிறது. இந்திய அணியிலுள்ள மிக மூத்த கிரிக்கெட் வீரர் டோணிதான். 36 வயதாகும் டோணி இப்போதும் ஃபிட்டாக இருப்பதை இந்த ஒரு படம் உலகிற்கு எடுத்துக் காட்டி விட்டது.
மேலும், ஸ்டெம்புக்கு பின்னால் நின்று கீப்பிங் செய்யும்போது எப்படி மின்னல் வேகத்தில் செயல்பட்டு எதிரணி பேட்ஸ்மேனை ஸ்டெம்பிங் செய்வாரோ, அதே போன்ற வேகத்தில் இவர் ஸ்டெம்பிங்கில் இருந்து தப்பியுள்ளார் என்றும் புகழாரம் சூட்டுகிறார்கள் ரசிகர்கள்.

17வது ஓவரை ஸ்பின் பவுலர் மிட்சேல் சான்ட்னர் வீசியபோதுதான் அந்த நிகழ்வு அரங்கேறியது. கிரீசை விட்டு இறங்கி வந்து ஆட முற்பட்டார் டோணி. ஆனால் பந்து மிஸ்சாகி விக்கெட் கீப்பரை நோக்கி சென்றது.
துரிதமாக செயல்பட்ட டோணி, வலது காலை பின்னால் வைத்து கிரீசை டச் செய்துவிட்டார். ஆனால் இடதுகாலோ பல அடி முன்னால் இருந்தது. கிட்டத்தட்ட யோகாசனம் செய்பவரை போல காணப்பட்டார் டோணி.

Coming down the track to play Mitchell Santner, Dhoni was foxed by the spinner. But he did a full split to return to the crease before Glenn Phillips could remove the bails.