தண்ணீர் வடியட்டும் திரும்ப வருவோம் சென்னையை விட்டு கிளம்பும் மக்கள்- வீடியோ

  • 7 years ago
கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழையால் வெளியூர்களில் இருந்து சென்னையில் வேலைபார்ப்பவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை மன்னார் வலைகுடாபகுதிகளில் தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் சென்னையிலும் கடந்த 4 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. புறநகர் பகுதிகளான மேடவாக்கம் வேளச்சேரி தாம்பரம் பள்ளிகரனை முடிச்சூர் ஒரகடம் காரப்பாக்கம் கேளம்பாக்கம் பகுதிகளில் குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். முடிச்சூர் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் ரப்பர் படகுகள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வட சென்னையான தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர், காசிமேடு கொடுங்கையூர் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

தொடர் மழையால் சென்னையில் பல்கலை கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினரும் தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியூர்களில் இருந்து சென்னை புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். நேற்று இரவு ஒருசிலர் சென்னையை விட்டு கிளம்பி விட்டனர். இன்று மேலும் பலர் செல்ல உள்ளனர்.

Dis : Workers in Chennai have begun to go to their hometowns by outsiders over the last four days