நீரும், நெருப்பும் பிரண்ட்ஷிப்... கோஹ்லி, தோனி பற்றி விவிஎஸ் புகழாரம்!-வீடியோ

  • 7 years ago
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த டோணி பதவி விலகியதை அடுத்து கோஹ்லி அணியின் கேப்டனாக பதவியேற்றார். கிரிக்கெட் போட்டி நடக்கும் சமயங்களில் களத்தில் கோஹ்லியை டோணி வழி நடத்துவதாக அடிக்கடி செய்திகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் கோஹ்லிக்கும், டோணிக்கும் இடையிலான உறவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ். லக்ஷ்மன் பேசியிருக்கிறார். அவர் களத்தில் எப்படி தங்களுக்குள் பழகிக் கொள்கிறார்கள் என அவர் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். இதில் அவர் கோஹ்லியும் டோணியும் அணியில் இருக்கும் வீரர்கள் என்பதையும் தாண்டி அவர்கள் நல்ல நபர்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் இருவரும் நீரும்- நெருப்பும் போன்றவர்கள் என்றும் கூறியிருக்கிறார்

Former Indian player VVS Laxman says Virat Kohli and MS Dhoni share a bromance with each other and they are very close friends, like no other in the Indian cricket team. He also added that Kohli is hot like fire and Dhoni is cool like water so that they can make a best pair.