பகுதி 1 - சீமான் நேர்காணல் - 1மார்ச்2016 | Part 1 - Seeman Interview - 1 Mar 2016

  • 8 years ago
கேள்வி: ஒரு திரைத்துறை கலைஞராக உள்ளே வந்த நீங்கள், அரசியலைக் கையிலெடுக்க வேண்டிய அவசியம் என்ன? சீமான்: அரசியல் இல்லாமல் ஒண்ணுமே இல்ல. ஒரு மனிதனுடைய பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையுமே தீர்மானிப்பது அரசியலா இருக்கு. பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை, காலையில் பிதுக்குகிற பற்பசை, குடிக்கிற தேநீர், படிக்கிற பாடம், பார்க்கிற வேலை, வாங்குகிற சம்பளம், இவை எல்லாத்தையுமே தீர்மானிப்பது அரசியலா இருக்கு. அரசா இருக்கு. அந்த அரசைத் தீர்மானிப்பது அரசியல். எனக்கான அரசியலை நான் தீர்மானிக்காம வேற யார் தீர்மானிக்க முடியும்? இது நமது கடமை. அரசியல் வேண்டாம் என நினைப்பது வானமே இல்லாத பூமியின் கீழே வாழப் போகிறேன் என்பதற்கு ஒப்பானது. உலகத்தையே இரண்டு இயல்கள்தான் இயக்குகின்றன. ஒன்று அறிவியல். இன்னொன்று அரசியல். உலகை இயக்கும் அந்த அறிவியலையே இயக்குவது அரசியலா இருக்கு. இவ்வளவு வலிமை பெற்ற அரசியலை நாம் செய்யாமல் வேறு யார் செய்வது? கேள்வி: இப்போதுள்ள அரசியல் - சமூகச் சூழலில் நீங்கள் நினைக்கிற அரசியலைச் செய்ய முடியும்னு நம்பறீங்களா? சீமான்: எதுவுமே முடியுமா சாத்தியமா என்பதிலிருந்து பிறப்பதில்லை. தேவையா தேவையில்லையா என்பதிலிருந்துதான் பிறக்கிறது. சாத்தியத்திலிருந்து எதுவும் பிறப்பதில்லை. தேவையிலிருந்துதான் பிறக்கிறது. தேவையே கண்டுபிடிப்பின் தாய். Demand is the Mother of Invention என்றுதான் போதிக்கிறாங்க. இந்த அடிப்படையில்தான் உலகத்தில் எதுவுமே படைக்கப்பட்டிருக்கு. இந்த பறவை மாதிரி நம்மால் பறக்க முடியாது என்று நினைத்திருந்தால் வானூர்தி இல்லை. தேவையா தேவை இல்லையா என்ற நிலையில்தான் நாம நிக்கிறோம். அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான சேவைதான் என்பது அய்யா பெருந்தலைவர் காமராஜர் கருத்து. அரசியல் என்பது மக்களின் மீது அதிகாரத்தைச் செலுத்துகிற விவகாரம் அல்ல. அது மக்களுக்கு ஆற்றப்படுகிற தொண்டு என்று தேசிய தலைவர் பிரபாகரன் கூறியிருக்கிறார். நாங்க இன்னும் ஒருபடி மேலே, 'அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும் அதை நிறைவு செய்கிற சேவையும்தான் அரசியலக் என்று பார்க்கிறோம். இன்றைய சூழலில் அரசியல் என்பது முழுக்க முழுக்க ஒரு தொழிலாக மாறிவிட்டது. தன்னலம் சார்ந்த ஒரு பிழைப்பு வாதமாக மாறியிருக்கு. எங்க அதிக இடம் கொடுப்பாங்க, யார் அதிகமா பணம் கொடுப்பாங்க, யாருடன் சேர்ந்தால் வெல்லலாம், எப்படியாவது இந்த மக்களை ஏமாற்றி ஆட்சி செய்திட முடியாதா? என்தாக உள்ளது. இதை மாற்றி எப்படியாவது இந்த மக்களை வாழ வச்சிட முடியாதா என்ற தவிப்பு நமக்கிருக்கு. மாற்றம் என்பது ஒரே நாளில் ஏற்பட்டு விடுவதல்ல. ஒரு புள்ளியிலிருந்து தொடங்குவது. அந்த அடிப்படையில், மாற்றத்தை விரும்புகிற ஒவ்வொருவரும் அங்கங்கே சிதறிக் கிடக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அடுத்த நொடியில் மாற்றம். மாற்றமும் புரட்சியும் பணத்திலிருந்து பிறப்பதல்ல, மக்களின் மனதிலிருந்து பிறப்பதுதான். அப்படி ஒரு மாற்றத்துக்கான, மாற்று அரசியலுக்கான சூழல் இப்போது உருவாகியிருப்பதாக நான் நினைக்கிறேன். எனவே நம்பிக்கையோடு களத்திலிறங்கியிருக்கிறேன். கேள்வி: இந்த சமூகம் இப்போது எதிர்நோக்குகிற தலையாய பிரச்சினைகள் என்னென்ன என்று நீங்கள் அடையாளம் கண்டிருக்கிறீர்களா? சீமான்: உறுதியாக. இந்த தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல, இந்தியாவில் வாழுகிற அத்தனை தேசிய இனங்களுக்கும் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை ஆபத்தானதாக இருக்கிறது. காந்தி கண்டது சுயராஜ்ஜியம். இந்தியனாய் இரு இந்தியப் பொருளை வாங்கு. அன்னிக்கு இது தேசப் பற்று. இன்னிக்கு இந்தியனா இருந்து இந்தியப் பொருளை வாங்கினால் தேசத் துரோகமா மாறிடும். இன்னிக்கு தற்சார்பு பொருளாதாரக் கொள்கையைத் தாண்டி, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் சூழல். அன்னிக்கு கப்பலில் வந்து வியாபாரம் பண்ணவனை அடிச்சி விரட்டிட்டு, இன்னிக்கு வானூர்தியில் வர்த்தகம் செய்ய வர்றவனையெல்லாம் வா வா ன்னு சிவப்புக் கம்பளம் விரிச்சு வரவேற்கிற நிலை இருக்கு. அன்னிக்கு ஒருத்தனுக்கு அடிமையாக இருந்த என் நாடு இன்று உலகத்திலிருக்கிற எல்லாருக்கும் அடிமையாகத் துடிக்கிற போக்கை நாம பாக்கிறோம். அதனால் இந்திய நிலப்பரப்புக்குள் வாழ்கிற ஒவ்வொரு தேசிய இனமும் பேராபத்தை எதிர்கொள்கிற போக்கை நான் பார்க்கிறேன். என் தனிப்பட்ட பார்வையில், உயிர் - அறிவு, மருத்துவம் - கல்வி. வயிறு.. இது வேளாண்மை சம்பந்தப்பட்டது. வேளாண்மையை இந்த நாடு கைவிட்டுவிட்டது. வளர்ச்சி என்பதே தொழில்துறை சார்ந்ததா பார்க்கப்படுகிறது. இந்தியா பன்னாட்டு முதலாளிகளைக் கூப்பிட்டு தொழில் தொடங்க வைக்கிறதே தவிர, ஜப்பான், கொரிய, ரஷ்ய, சீன முதலாளிகள் வருவதாகச் சொல்கிறார்களே தவிர, இந்த நாடுகளிலெல்லாம் என் தேசம் எந்த முதலீடுகளையும் செய்யவில்லை. என் நாடு முதலீடு செய்வது ஸ்விஸ் வங்கியிலயும் அந்நிய நாட்டு வங்களிலும்தான். வேளாண்மையைக் கைவிட்டதால் என் நாட்டில் 130 கோடி மக்களில் 40 கோடிப் பேர் இரவு உணவின்றி தூங்கப் போகிறார்கள். இது ஒரு பேராபத்து. இன்னொன்னு உயிர் ஆகாரமா இருக்கிற குடிநீர் விற்பனைக்கு வந்துடுச்சி. தண்ணீர் விற்பனைக்கு வந்துவிட்ட தேசம் என்னைக்குமே உருப்படாது. பரிணாம வளர்ச்சியில் கடைசி நிலைதான் மனிதன். நான் ஒரு கடையில் பணம் கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட முடியும். ஆனால் யானை, புலி, சிங்கம், குருவி, கொக்கு போன்றவையெல்லாம் எங்கே போகும்? இவையெல்லாம் இல்லேன்னா, இந்த உயிர்ச்சூழல், பல்லுயிர்ப் பெருக்கம் என்பதே இருக்காதே. நான் வாழ்வதற்கு எல்லாவிதமான உயிர்களையும் அழிப்பதை எப்படி நாம் பார்க்கணும்? காட்டுக்குள்ள வாழ்கிற எந்த உயிரினத்தாலும் அந்த காட்டுக்கு ஆபத்து இல்லை. ஆனால் நாட்டுக்குள் வாழ்கிற இந்த சமூக விலங்கான மனிதனால்தான் காடுகளுக்கு பேராபத்து. Seeman's Question & Answer series part -1 அடுத்து உயிர் காக்கிற மருத்துவம் முழுக்க வியாபாரமாகிடுச்சி. அறிவு எனும் கல்வியும் வியாபாரமாகிடுச்சி. இதுதான் இந்த இந்திய நிலப்பரப்பில் வாழ்கிற மக்கள் சந்திக்கிற பேர

Recommended